இலக்கு : இன்றியமையாதது!
குறிக்கோள், லட்சியம், சாதனை என்பது வெற்றியாளர்களுக்கு மட்டுமே சொந்தமான பெரிய வார்த்தையல்ல.மாறாக நம் அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாமல் நாமும் பல இலக்குகள் நிர்ணயித்து அதில் வெற்றியும் பெறுகிறோம், அதனையே நாம் உணர்ந்து, சிந்தித்து செயல்படும்பொழுது நாம் வெற்றியாளர் ஆகிறோம் அவ்வளவுதான்.... எப்படி?
- நாம் பஸ்சில் (பயணம்) செய்யும் போது நாம் செல்லவேண்டிய இடம், பஸ் நம்பர் பார்த்து செல்வது போல்தான்
- மார்க்கெட்டுக்கு சென்று நமக்கு தேவையானதை மட்டும் வாங்குவதை போல்
- காலையில் எழுந்திர்ரிக்க அலாரம் வைப்பது போல்
நாம் நம் வாழ்க்கையை சீராக எடுத்து செல்ல இலக்கு என்பது மிக முக்கியம் ஆகும். நாம் நிர்ணயிக்கும் இலக்கே நம்மை நகர வைக்கும், அடுத்த கட்டத்திற்கு நம்மை எடுத்து செல்லும்.
அட எனக்கு இதெல்லாம் வேலைக்காகாது, நான் சாதனையாளராக விரும்பவில்லை
காலத்திற்கு ஏற்ப Updated ஆக இருப்பதுகூட இலக்குதான், இல்லையென்றால் உங்களுக்கு பின்னால் இருப்பவர்கள் உங்களை முந்திக்கொண்டு சென்று உங்கள் இடத்தையும் பிடித்திடுவர். நீங்களோ ஒரே இடத்தில் இருப்பதாக நினைத்து கொண்டு பின்னால் சென்று கொண்டிருப்பீர்கள். ஏனென்றால் வாழ்வில் எவரும் ஒரே இடத்தில் நிலைப்பது கிடையாது முன்னும் பின்னுமாக நகர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒருவரும் இருக்கும் இடத்தில் நிலைத்து நிற்பதில்லை, நிற்க முடியாது ஏனென்றால் நம் உலகம் சுற்றுவது போலவே சகல மனிதர்களின் வாழ்வும் இரு சங்கிலிகளால் இணைக்கபட்டிருக்கிறது. ஒன்று மனிதர்களே இழுத்து செல்லும் முன்னேற்ற சங்கிலி மற்றொன்று தன்னைதானே இழுத்து செல்லும் பாதாள சங்கிலியாகும்.
இந்த தொடரும் பயணத்தில் நாம் இலக்கு நிர்ணயித்து, அதனை நோக்கி நம் கவனத்தை செலுத்தும் பொழுது வாழ்க்கை நம் கையில் வந்துவிடும், நம்மை மீறி பல ஆச்சரியங்கள் நடப்பதை காணலாம். அதாவது நம்மை அறியாமல் நாம் நம் இலக்கை நோக்கி சென்றுகொண்டிருபோம் மற்றும் நம்மை சுற்றியுள்ள சமூகமும் நமக்கு உதவி கொண்டிருக்கும்..
உடனே கண்மூடித்தனமாக முடிவெடுக்காமல் தனிமையில் சில மணிநேரங்கள் சிந்திக்க ஆரம்பியுங்கள். உங்களை நீங்களே விமர்சித்து, முழுவதுமாக அலசி ஆராயுங்கள் ஏனென்றால் யாராக இருந்தாலும் அடுத்தவர்கள் உங்களை உங்களைவிட அறிந்துவிட முடியாது. உங்களது ஆர்வம் எதனை நோக்கி உள்ளது என்று பாருங்கள், எதிலும் ஆர்வமில்லஎன்றலும் உங்கள் பணியில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வழியைப்பற்றி யோசியுங்கள்... தீர்க்கமான ஒரு இலக்கை, குறிக்கோளை நிர்ணயிங்கள்.
வெற்றி நம்மை பின்தொடர நம்மையும் நம் நாட்டையும் வளமாக்குவோம்.
India-2020: நமது தேசத்திற்கு, ஒரு மிக பெரிய நாட்டிற்கு ஒரு இலக்கு நிர்ணயித்து அதனை நோக்கி நம் இந்திய இளைஞர்கள் சிந்திக்க வைத்த பெருமை என்றும் நம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களையே சாரும்.
நம் நாடு வல்லரசாக நாம் நாட்டிற்காக ஓடியாடி உழைக்க வேண்டாம் மாறாக நம் சொந்த வாழ்க்கை முன்னேற நாம் போராடினாலே போதும் என்பது எனது கருத்து. ஏனென்றால் ஒரு தனி மனிதனின் வாழ்வு வளம் பெரும் போது அவன் குடும்பமும் வளம்பெறும்; 120 கோடி தனி மனிதர்களும், அவர்களது குடும்பமும் சேர்ந்தது தானே இந்தியா.
No comments:
Post a Comment